செய்திகள்
கோப்புப்படம்

குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.10 லட்சம் செலவில் ஹைடெக் மருத்துவ உபகரணங்கள்

Published On 2020-04-08 10:44 GMT   |   Update On 2020-04-08 10:44 GMT
குளச்சல் அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஹைடெக் ஆய்வுக்கூடம் அமைப்பது, இ.சி.ஜி. வெண்டிலேட்டர் உள்பட ஐ.சி.யு. வார்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் வாங்கப்படும் என பிரின்ஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
குளச்சல்:

குளச்சல் அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர்கள், செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு முக கவசங்கள் மற்றும் உள் நோயாளிகளுக்கு ரொட்டி, பால் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனையில் நடந்தது.

கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு மருத்துவ அலுவலர் கற்பகத்திடம் இந்த பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் டாக்டர் சுகவனேஷ், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட மருத்துவர் பிரிவு டாக்டர் பினுலால்சிங், துணை தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர், டேவிட், ஸ்டீபன், ஜலாலுதீன், அஷ்ரப், சிறுபான்மை பிரிவு மண்டல துணை தலைவர் ஜெபசீலா, ராஜூவ்காந்தி பிரிகேடியர் சோனி விதுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ., மருத்துவ அலுவலரிடம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மருத்துவமனைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் மருத்துவ அலுவலரிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரின்ஸ் எம்.எல்.ஏ., குளச்சல் அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஹைடெக் ஆய்வுக்கூடம் அமைப்பது, இ.சி.ஜி. வெண்டிலேட்டர் உள்பட ஐ.சி.யு. வார்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் வாங்கப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News