செய்திகள்
மதுரை அரசு ஆஸ்பத்திரி

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 17 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2020-04-05 11:36 GMT   |   Update On 2020-04-05 11:36 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 17 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை:

மதுரையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 14 பேர் ஏற்கனவே மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் 60 வயது முதியவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவரும் டெல்லியில் நடந்த மத மாநாட்டில் கலந்து கொண்டு மதுரை திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மதுரையில் இருந்து டெல்லி மத மாநாட்டில் பங்கேற்ற 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 2 பேரும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்களுடன தொடர்பில் இருந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தை சேர்ந்த சிலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன்மூலம் மதுரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி கொரோனா மருத்துவமனையில் கொரோனா நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் 36 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News