செய்திகள்
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.

கொரோனா தடுப்பு பணிக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ரூ. 25. லட்சம் நிதி உதவி

Published On 2020-04-03 11:39 GMT   |   Update On 2020-04-03 11:39 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
மதுரை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் மேலும் இதனால் ஏழை எளியோர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நியாயவிலை கடைகளில் ரூபாய் 1,000 விலையில்லா 20 கிலோ அரிசி, சர்க்கரை, பாமாயில் மற்றும் துவரம்பருப்பு உள்ளிட்டவைகளை வழங்க உத்தரவிட்டார். மேலும் கொரோனா ஓழிப்பு நடவடிக்கைக்காக பொது மக்கள் தாராளமாக நிதியுதவி வழங்கலாம் என கோரிக்கை விடுத்தார்.

அதனடிப்படையில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வழங்கியுள்ளார். இதனை கலெக்டர் வினய்யிடம் வழங்கினார்.

Tags:    

Similar News