செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்வு

தமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு

Published On 2020-04-01 12:55 GMT   |   Update On 2020-04-01 12:55 GMT
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 110 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தமிழகத்தில் அதிகரிக்காமல் இருந்தது.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நேற்று வரை 500-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டனர்.

அவர்களில் 45-க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டதால், ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து வந்தவர்களில் இன்று 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News