செய்திகள்
கோப்புபடம்

கொரோனாவை கண்டுபிடிக்க தமிழகத்தில் மேலும் 3 பரிசோதனை மையத்துக்கு அனுமதி

Published On 2020-04-01 02:47 GMT   |   Update On 2020-04-01 02:47 GMT
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தமிழகத்தில் மேலும் 3 பரிசோதனை மையங்கள் அமைக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
சென்னை:

இந்தியாவில் புனே ஆய்வகத்துக்கு பின்னர் தமிழகத்தின் சென்னை கிண்டி கிங் மையத்தில் கொரோனா நோய் தொற்றை கண்டுபிடிக்கும் ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதல் ஆய்வகம் அமைக்க அனுமதிகோரி தமிழக அரசு சார்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் கூடுதலாக 9 அரசு மருத்துவமனைகளில் ஆய்வகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் 4 தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் நவீன எந்திரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் 10 அரசு மருத்துவமனை மற்றும் ஆய்வகத்திலும், 4 தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகத்திலும் இந்த நவீன எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று மேலும் 3 பரிசோதனை மையங்கள் அமைக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், 2 தனியார் ஆய்வகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News