செய்திகள்
தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணி

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு

Published On 2020-03-30 12:55 GMT   |   Update On 2020-03-30 12:55 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தொடர்ந்து தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
ராமநாதபுரம்:

கொரோனா பரவலை தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். அண்மையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 4125 பேரை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் 30 நாட்களை கடந்த நிலையில் 1092 பேருக்கு கொரோனா தொற்று இல்லை உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 3033 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையில், மத்திய அரசு உத்தரவுப்படி மார்ச் 1-ந் தேதிக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் 159 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News