செய்திகள்
முக கவசம்

பெரம்பூர் ரெயில்வே தொழிற்சாலையில் முக கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது

Published On 2020-03-29 12:10 GMT   |   Update On 2020-03-29 12:10 GMT
பெரம்பூர் ரெயில்வே கேரேஜ் தொழிற்சாலை, லோகோ தொழிற்சாலையில் முக கவசம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முக கவசம் அவசியமாகிறது. தற்போது முக கவசம், கிருமிநாசினி போன்ற பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள், அரசின் பிற துறை ஊழியர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்வது பாதுகாப்பாக இருக்கும் என்று கருதப்படுவதால் முக கவசத்துக்கு தற்போது தேவை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் முக கவசம் தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளது.

பெரம்பூர் ரெயில்வே கேரேஜ் தொழிற்சாலை, லோகோ தொழிற்சாலையில் முக கவசம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர 100 கட்டில் மற்றும் படுக்கைகளும் தயாரிக்கப்படுகின்றன. ரெயில் பெட்டிகள் தனி வார்டுகளாக மாற்றும் பணி ஒருபக்கம் நடந்து வருகிறது. அதற்கு இந்த மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News