செய்திகள்
கோப்புப்படம்

போடி மலையில் காட்டுத்தீ- பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Published On 2020-03-25 11:24 GMT   |   Update On 2020-03-25 11:24 GMT
போடி அருகே மலைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
மேலசொக்கநாதபுரம்:

போடி அருகில் உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த விஜயமணி (வயது45), மகேஸ்வரி (25), மஞ்சுளா (28), கல்பனா (45), மகன் லோகேஸ்வரன் (20), வஜ்ஜிரமணி (25), ஒண்டிவீரன் (28), திருமூர்த்தி மனைவி ஜெயஸ்ரீ (23), மகள் கிருத்திகா (2) ஆகியோர் கேரள மாநிலம் சாந்தாம்பாறை அருகே பேத்தோப்பு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டதால் சொந்த கிராமத்திற்கு திரும்ப முடிவு செய்தனர். பஸ் போக்குவரத்து இல்லாததால் மலைச்சாலையில் நடந்து வந்தனர்.

அப்போது அந்த வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வந்தது. இதில் விஜயமணி மற்றும் அவரது பேத்தி கிருத்திகா, மகேஸ்வரி ஆகியோர் உடல் கருகி பலியாகினர். மற்ற 6 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

அவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருமூர்த்தி மனைவி ஜெயஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இதனால் தீயில் கருகி பலியானவர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News