செய்திகள்
மோசடி

ராஜபாளையம் அருகே ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்தவரை கைது செய்ய வேண்டும்- பொதுமக்கள் போலீசில் புகார்

Published On 2020-03-21 15:01 GMT   |   Update On 2020-03-21 15:01 GMT
ராஜபாளையம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் ராமர் (வயது 55). இவர் அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி பொது மக்களிடம் ரூ.20 லட்சம் வரை வசூல் செய்தார்.

ஏலச்சீட்டு முடிந்தவுடன் அனைவரும் ஒரே சமயத்தில் பணம் கேட்டுள்ளனர். அவர் தருவதாகக் கூறி பல மாதங்கள் கழித்தும் தரவில்லை. எனவே சேத்தூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தனர். பின்னர் அவரது வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

குறிப்பிட்ட தேதியில் பணம் வழங்கப்படும்என்று கூறியதைத் தொடர்ந்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். குறிப்பிட்ட தேதியில் பணம் கேட்டு அனைவரும் அவரது வீட்டிற்குச் சென்ற போது, ராமரின் மகன் சிவக்குமார் அனைவரையும் அவமரியாதையாகப் பேசியதுடன், கூலிப் படையை வைத்து மிரட்டினார்.

மேலும் இன்னாசிமுத்து என்பவரை ஜாதியைக் குறிப்பிட்டு திட்டியதாகவும் கூறப்படுறது. இதனால் அனைவரும் ஒன்று சேர்ந்து சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி. நாகசங்கர் கூறியதின் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News