செய்திகள்
கோப்பு படம்

வேலை இல்லாததால் விரக்தி மதுவில் சயனைடு கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2020-03-19 12:05 GMT   |   Update On 2020-03-19 12:05 GMT
கோவையில் வேலை இல்லாத விரக்தியில் மதுவில் சயனைடு கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை காந்திபார்க் சுப்பிரமணியம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (40). நகை பட்டறை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் சரிவர வேலை இல்லாததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்தார்.

இதனால் மனவேதனை அடைந்த ஆனந்த் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் சயனைடு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சுரேந்திர மோகன் (36). தொழிலாளி. அவரது மனைவி சத்யா (27). இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனவேதனை அடைந்த சுரேந்திர மோகன் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அருச்சித் (வயது 43). இவர் கோவை ஆர்.எஸ் புரத்தில் குடும்பத்துடன் தங்கி டீக்கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்வதற்காக மண்எண்ணைய் அடுப்பை பற்ற வைத்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மண்எண்ணைய் அடுப்பு திடீரென வெடித்து அருச்சித் மீது தீ பிடித்தது. தீ மளமளவென அவர் உடல் முழுவதும் பரவி அலறி துடித்தார். அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News