செய்திகள்
கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி தொடக்கம்

Published On 2020-03-14 10:37 GMT   |   Update On 2020-03-14 10:37 GMT
கூடங்குளம் 2-வது அணு உலை இன்று இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருவதால் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணுஉலைகள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் முதலாவது அணு உலையில் தற்போது 980 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

2-வது அணுஉலையில் கடந்த டிசம்பர் மாதம் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 2-வது அணுஉலையில் பராமரிப்பு பணி தொடர்ந்து நடந்து வந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து இன்று காலை 2-வது அணுஉலை இயக்கப்பட்டது. அங்கு 350 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

தற்போது 2 அணு உலைகளும் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருவதால் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும். இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூடங்குளம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News