செய்திகள்
பீர்

கோடை வெயில்: சென்னையில் ‘ஜில்’ பீருக்கு கடும் தட்டுப்பாடு

Published On 2020-03-11 07:35 GMT   |   Update On 2020-03-11 07:35 GMT
சென்னையில் மதுக்கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மது பிரியர்கள் ஜில் பீரினை விரும்பி குடிப்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் இந்த வருடம் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இப்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஏப்ரல், மே மாதத்தில்தான் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் இப்போதே வெப்பம் அதிகமாக உள்ளது.

கோடை காலத்தில் பொதுவாக குளிர்பானங்கள், பழங்கள், அதிகளவு விற்பனையாகும். அதே போல பீர் விற்பனையும் கூடுதலாக இருக்கும். குறிப்பாக ஜில் பீருக்கு கடும் கிராக்கி ஏற்படும். இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளில் பீர் வகைகள் அதிகளவு வாங்கி இருப்பு வைப்பது வழக்கம்.

சென்னையில் மதுக்கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மது பிரியர்கள் ஜில் பீரினை விரும்பி குடிக்கின்றனர். இதனால் தற்போது குளி ரூட்டப்பட்ட ஜில் பீர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுக்கடைகளில் ஜில் பீர் மதுபானம் விற்கக் கூடாது என பார் உரிமையாளர்கள் அடம் பிடிப்பதால் பார்களில் மட்டுமே கிடைக்கிறது. சாதாரன பீரை விட ஜில் பீருக்கு விலை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பார்களிலும் பீர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.30 முதல் ரூ.50 வரை வசூலிக்கிறார்கள். அதிக விலை கொடுத்தாலும் சில நேரங்களில் ஜில் பீர் கிடைப்பது இல்லை.

சென்னையை , புறநகர் பகுதிகளில் ஜில் பீர் தேவை அதிகரித்துள்ளது. குளிரூட்டப்படாத பீர்கள் மதுக்கடைகளில் விற்பதை வாங்க மறுக்கிறார்கள். விலை அதிகமாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் ஜில் பீரை வாங்கி குடிக்கிறார்கள்.


இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறும்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஜில் பீருக்குதேவை அதிகரிக்கிறது. பார்களில் அதிகளவு பீர் பாட்டில்கள் வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்கின்றனர். நகரப்பகுதிகளில் தான் ஜில் பீர் கிடைப்பது கஷ்டம். பார்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

கோடைகாலத்தில் இன்னும் பீர் விற்பனை அதிகரிக்கும். பீர் குடிக்க வேண்டும் என்றே இளைஞர்கள் படையெடுக்கிறார்கள். அவர்கள் கேட்கும் ஒரு சில “பிராண்ட்” கிடைப்பது இல்லை. மற்றபடி பீர் தட்டுப்பாடு என்று சொல்கிற அளவிற்கு நிலைமை இல்லை என்றார்.

Tags:    

Similar News