செய்திகள்
கைது

திருச்சி அருகே போலீசாரை கத்தியால் குத்திய வாலிபர்கள் கைது

Published On 2020-03-10 12:05 GMT   |   Update On 2020-03-10 12:05 GMT
திருச்சி அருகே போலீசாரை கத்தியால் குத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டுகளாக பணியாற்றி வருபவர்கள் குணசேகரன், இஸ்மாயில். இவர்கள் இரவு பணியில் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 2 பேர் ரோட்டில் குடிபோதையில் ரகளை செய்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது ஏட்டுகளை அவர்கள் அவதூறாக பேசினர். மேலும் அதில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார்.

இதனால் ஏட்டு குணசேகரன் அவரது கையில் இருந்த கத்தியைப் பிடுங்க முயன்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஏட்டுகள் குணசேகரன் மற்றும் இஸ்மாயில் தாக்கப்பட்டனர். இதுகுறித்து கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காயமடைந்த 2 போலீஸ் ஏட்டுகளும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில் அவர்களுடன் தகராறு செய்த வாலிபர்கள் யார் என விசாரித்தபோது அதில் ஒருவர் பெயர் செல்லப்பாண்டி, மதுரை புளியந்தோப்பு மண்டபம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. மற்றொருவர் சரவணகுமார், திருச்சி கோட்டை பூசாரி தெருவை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

நண்பரைப் பார்ப்பதற்காக செல்லப்பாண்டி திருச்சி வந்தபோது குடிபோதையில் செய்த தகராறு கடைசியில் போலீசாரை தாக்கி கைது செய்யும் நிலைக்கு வந்துவிட்டது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News