செய்திகள்
கைது

திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்களை மிரட்டி வழிப்பறி செய்த 5 பேர் கைது

Published On 2020-03-09 10:39 GMT   |   Update On 2020-03-09 10:39 GMT
திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்களை மிரட்டி வழிப்பறி செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலைக்கு பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால் அதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று பவுர்ணமி என்பதால் போலீசார் வாகனங்களில் ரோந்துசென்று  கண்காணித்தனர். அப்போது திருவண்ணாமலையில் மணலூர்பேட்டை ரோட்டில்  போலீசார் சென்றபோது 5 பேர் கும்பல் சந்தேகத்திற்கிடமாக இருந்தனர்.

அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்த மிதுன் (வயது19) பிரபாகரன் (20) காதர்பாட்சா (18) சுகுமார் (19) சமுத்திரம் தினேஷ் (20) என்பதும் இவர்கள் கிரிவலம் வரும் பக்தர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து 5பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News