செய்திகள்
கைது

புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய கடலூர் வாலிபர் சிக்கினார்

Published On 2020-03-03 12:18 GMT   |   Update On 2020-03-03 12:18 GMT
புதுவையில் இறைச்சி கடையில் வேலைசெய்து கொண்டு மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற கடலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் போலீஸ்காரர்கள் ராஜரத்தினம், செல்வதுரை ஆகியோர் நேற்று இரவு நெல்லித்தோப்பு புவன்கரே வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் பயந்து தப்பி ஓடமுயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால் அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்ததால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த காரைக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெய் என்ற கலைவாணன் (வயது23) என்பதும் இவர் வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் புதுவை - கடலூர் சாலையில் திருடியதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இவர் புதுவையில் ஒரு கோழி இறைச்சி கடையில் வேலை செய்து கொண்டு மேலும் விலை உயர்ந்த 2 மோட்டார் சைக்கிள்களை திருடி வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கலைவாணனை கைது செய்து அவரிடம் இருந்து 3 திருட்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த 3 மோட்டார் சைக்கிள்களின் மதிப்பு சுமார் ரூ. 4 லட்சத்துக்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News