செய்திகள்
கோப்புப்படம்

புழல் சிறையில் 59 கைதிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

Published On 2020-03-02 07:04 GMT   |   Update On 2020-03-02 07:04 GMT
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 59 கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தனித்தேர்வர் மையத்தில் தேர்வை எழுதினர்.
திருவள்ளூர்:

பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 19,281 மாணவர்களும், 22,164 மாணவிகளும், தனித்தேர்வர்கள் 687 என மொத்தம் 42,921 பேர் தேர்வு எழுதினர். தேர்வர்களுக்காக 138 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நரம்பியல் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வு எழுத சலுகையாக கூடுதலாக ஒரு மணி நேரம் 298 மாணவர்களுக்கும், சொல்வதை எழுதுவோர் சலுகை 236 மாணவர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குனரால் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

மாணவ-மாணவிகள் தேர்வு எழுதும்போது, தேர்வு அறைக்குள் மொபைல் போன், கால்குலேட்டர், கைக்கடிகாரம், ஷூ, பென்டிரைவ், பெல்ட் மற்றும் பர்ஸ் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

புழல் சிறையில் தனித்தேர்வர் மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு 59 கைதிகள் பொதுத்தேர்வு எழுதினர்.
Tags:    

Similar News