செய்திகள்
செயின் பறிப்பு

ஆரணியில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் செயின் பறிப்பு

Published On 2020-02-27 11:05 GMT   |   Update On 2020-02-27 11:05 GMT
ஆரணியில் தெருவில் நடந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர்.

ஆரணி:

ஆரணி அருகே உள்ள இ.பி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமதி (வயது 40)சேவூரில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார்.

இ.பி நகரில் 4-வது தெருவில் சுமதியின் பெற்றோர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு 8 மணிக்குபெற்றோர் வீட்டிற்கு சென்ற சுமதி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அவருடன் அவரது அக்கா நிர்மலா என்பவரும் வந்தார். இருவரும் 3-வது தெருவில் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் வேகமாக வந்து திடீரென சுமதி அணிந்திருந்த செயினை பறித்தனர். அப்போது சுதாரித்துக்கொண்ட சுமதி செயினை விடாமல் பிடித்தார். மேலும் அவரது அக்கா கூச்சலிட்டார். சுமதி கழுத்தில் 3 செயின் அணிந்திருந்தார் அதில் ஒரு செயின் மட்டுமே கொள்ளையர்கள் கையில் சிக்கியது. 2 செயின்கள் அதிர்ஷ்டவசமாக கீழே விழுந்து விட்டன. சுமதியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் மர்ம நபர்கள் 2 பவுன் நகையுடன்அங்கிருந்து பைக்கில் வேகமாக தப்பிச் சென்று விட்டனர் . அதிர்ஷ்டவசமாக 2 செயின் கீழே விழுந்ததால் 10 பவுன் நகை தப்பியது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News