செய்திகள்
அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு வீடு

திருவொற்றியூர் மணலி விரைவுச் சாலையில் ஆக்கிரமிப்பு வீடு-கடைகள் அகற்றம்

Published On 2020-02-26 09:32 GMT   |   Update On 2020-02-26 09:32 GMT
திருவொற்றியூர் மணலி விரைவுச்சாலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடிசை வீடுகள், சிறு கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
திருவொற்றியூர்:

திருவொற்றியூர், ராம கிருஷ்ணா நகர் மணலி விரைவுச் சாலை பகுதியில் ஏராளமான கடைகள், வீடுகள் ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ளது.

திருவொற்றியூர், ராம கிருஷ்ணா நகர் மணலி விரைவுச்சாலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஏராளமான கடைகள், வீடுகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் பால் தங்கத்துரை, செயற்பொறியாளர் வேலுச்சாமி, உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள், சிறு கடைகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி அப்புறப்படுத்தினர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் திருவொற்றியூர் பாலகிருஷ்ணன் நகர் பகுதியில் செல்வ விநாயகர் கோவில் பின்புறம் மாநகராட்சி பூங்கா ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News