செய்திகள்
கோப்புப்படம்

மூடப்பட்ட மதுக்கடைகள் எவ்வளவு? -அமைச்சர் பதில்

Published On 2020-02-18 09:49 GMT   |   Update On 2020-02-19 02:38 GMT
தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் எவ்வளவு? என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் மனோ தங்கராஜ், படிப்படியாக மதுக்கடை மூடுவதாக அறிவித்ததை செய்யவில்லை, மதுக்கடை வருமானம்தான் அதிகரிக்கிறது என குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, ‘உறுப்பினர் தவறான கருத்தை கூறுகிறார். படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்று அறிவித்தோம். அந்த அறிவிப்பை வெளியிட்டபோது 6,215 மதுக்கடைகள் இருந்தன. தற்போது மூடப்பட்டு 5262 மதுக்கடைகள் மட்டுமே உள்ளன’ என்றார்.
Tags:    

Similar News