செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மறியல்

Published On 2020-02-15 10:40 GMT   |   Update On 2020-02-15 10:40 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது.

தடியடி சம்பத்தை கண்டித்து விழுப்புரத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்தினர்.

செஞ்சியில் 4 முனை சந்திப்பில் இஸ்லாமியர்கள் போலீசாரை கண்டித்து மறியல் செய்தனர். போலீசார் அவர்களை சமரசபடுத்தி அனுப்பினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் இஸ்லாமியர்கள் சென்னை சம்பவத்தைகண்டித்து போராட்டம் செய்தனர். அப்போது போலீசாரை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியதோடு மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதான படுத்தினார்கள்.
Tags:    

Similar News