செய்திகள்
கேசி பழனிசாமி

கே.சி. பழனிசாமி ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

Published On 2020-02-10 07:48 GMT   |   Update On 2020-02-10 07:48 GMT
முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.
கோவை:

கோவையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. கே.சி. பழனிசாமி கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆனாலும் அவர் அ.தி.மு.க. லெட்டர் பேடு, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தி தான் அ.தி.மு.க.வில் இருப்பதாக இணையதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இது குறித்து சூலூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கே.சி. பழனிசாமியை போலீசார் கைது செய்தனர்.

அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கே.சி. பழனிசாமி ஜாமீன் கேட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து இருதரப்பை சேர்ந்த வக்கீல்களின் வாதம் நடைபெற்றது. பின்னர் கே.சி.பழனிசாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News