செய்திகள்
இடிந்த பள்ளி கட்டிடம்.

ஆரணி அருகே பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி திடீர் தடுத்து நிறுத்தம்

Published On 2020-02-06 11:56 GMT   |   Update On 2020-02-06 11:56 GMT
ஆரணி அருகே பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் திடீரென தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி:

ஆரணி அடுத்த பூங்கம்பாடி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 137 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

தலைமையாசிரியர் ஜெயந்தி உட்பட 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் 2கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால் பள்ளி கல்வித்துறை சார்பில் 12 லட்சம் மதிப்பீடு தொகை வர உள்ளதால் பழுதடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்க இருந்தது இதனை ஊராட்சி மன்ற தலைவர் தேவகி கோபால் கட்டிடம் இடிக்கும் பணியை தடுத்து நிறுத்தினார்.

மாற்று இடம் இல்லாமல் கட்டிடத்தை இடிக்க கூடாது என கூறினார். ஆசிரியர்கள் மறுத்தனர். புதிய கட்டிடம் கட்டுவதற்கு கட்டிடத்தை இடிக்க வேண்டும் என கூறினர். வாக்குவாதம் ஏற்பட்டதால் உடனே பள்ளி கட்டிடம் இடிக்கும் பணியை நிறுத்தி விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News