செய்திகள்
சசிகலா

திவாகரன் மகன் திருமணம்- சசிகலா மார்ச் மாதம் பரோலில் வருகிறார்

Published On 2020-01-30 06:11 GMT   |   Update On 2020-01-30 06:11 GMT
திவாகரனின் மகன் ஜெய ஆனந்த்துக்கு மார்ச் 5ந்தேதி திருமண நடைபெற உள்ளதால் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வருகிறார்.
பெங்களூரு:

சொத்துகு விப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

3 ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள அவருக்கு இன்னும் ஒராண்டு தண்டனை மீதம் உள்ளது. அவர் விரைவில் பரோலில் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலா கடந்த 3 ஆண்டுகளில் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது 10 நாட்கள் பரோலில் வந்தார். அவர் உயிரிழந்த போது சசிகலா 15 நாட்கள் பரோலில் வந்தார். ஆனால் 9-வது நாளிலேயே சிறைக்கு திரும்பி விட்டார். 

இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய ஆனந்த்துக்கும், சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் பேத்திக்கும் (பாஸ்கரனின் மகள்) மார்ச் 5-ந் தேதி மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் சசிகலா கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என இரு குடும்பத்தினரும் விரும்புகின்றனர். இதனால் அவரை பரோலில் வெளியே அழைத்து வர முடிவு செய்து உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடியை சேர்ந்த உறவினர்கள் சிலர் பெங்களூர் சென்று சசிகலாவை சிறையில் சந்தித்து பேசினர். அப்போது திவாகரன் குடும்ப திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதை சசிகலா ஏற்றுக் கொண்டு திருமணத்தில் கலந்து கொள்ள சம்மதித்ததாக கூறப்படுகிறது. பரோலில் வருவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு தனது வக்கீல்களிடம் அவர் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதன் பேரில் அடுத்த வாரம் பரோல் கேட்டு விண்ணப்பம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:    

Similar News