செய்திகள்
கைது

அரியாங்குப்பத்தில் மினிலாரி டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்- ரவுடி கைது

Published On 2020-01-25 10:18 GMT   |   Update On 2020-01-25 10:18 GMT
அரியாங்குப்பத்தில் மினி லாரி டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்:

அரியாங்குப்பம் பி.சி.பி. நகரை சேர்ந்தவர் ஆனந்து (வயது45). மினி லாரி டிரைவர். நேற்று இவர் அரியாங்குப்பம் ஜெயராம் நகரில் நெல்மூட்டைகளை ஏற்றிவர மினிலாரியை ஓட்டி சென்றார். அப்போது பெரிய இரிசாம்பாளையத்தை சேர்ந்த சந்திரன் (31) என்பவர் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை நடுவே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தார்.

இதையடுத்து ஆனந்து மோட்டார் சைக்கிளை அங்கிருந்து அப்புறப் படுத்துமாறு சந்திரனிடம் தெரிவித்தார். அதற்கு சந்திரனைமினிலாரியை மாற்றுவழியாக ஓட்டி செல்லுமாறு கூறினார். இதனால் இருவருக்கு மிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த சந்திரன் தென்னை மட்டையை எடுத்து மினி லாரியின் கண்ணாடியை உடைத்தார். மேலும் ஆனந்துவை சரமாரியாக தாக்கி அவரது கைவிரலை கடித்து துப்பினார். அதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்று விட்டார்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஆனந்து புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குபதிவு செய்து சந்திரனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்திரன் ரவுடி ஆவார். இவர் மீது அரியாங்குப்பம் மற்றும் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News