செய்திகள்
ரவிச்சந்திரன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்தார்

Published On 2020-01-10 05:38 GMT   |   Update On 2020-01-10 05:38 GMT
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்தார். இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மதுரை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயார் ராஜேஸ்வரியை பார்ப்பதற்காக பரோலுக்கு விண்ணப்பித்து இருந்தார். சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

எனவே ரவிச்சந்திரன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை ஐகோர்ட்டில் பரோல் கோரி மனுத்தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் விசாரணையின் முடிவில் ரவிச்சந்திரனுக்கு இன்று (10-ந் தேதி) முதல் வருகிற 25-ந் தேத வரை 16 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.


இதனைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரில் ரவிச்சந்திரனின் வீடு உள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் பொருத்தி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News