செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் ஆசிரியர் வீட்டில் புகுந்து பணம் திருடிய லிபியா நாட்டு வாலிபர்

Published On 2020-01-07 09:31 GMT   |   Update On 2020-01-07 09:31 GMT
புதுவையில் ஆசிரியர் வீட்டில் புகுந்து பணம் திருடிய லிபியா நாட்டை சேர்ந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:

புதுவை சந்தாசாகிப் வீதியை சேர்ந்தவர் முகமதுரியாஸ் (வயது35). புதுவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம் போல் முகமதுரியாஸ் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி பாத்திமாசாரா (31) மற்றும் தாயார் மும்தாஜ்பேகம் ஆகியோர் மட்டும் இருந்தனர்.

மாலை 4.30 மணியளவில் முகமதுரியாஸ் வீட்டில் ஒரு வாலிபர் புகுந்தார். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கபணம் மற்றும் கார் சாவியை திருடிகொண்டு நைசாக வீட்டை விட்டு வெளியேறினார். இதனை பார்த்து விட்ட முகமதுரியாசின் தாயார் மும்தாஜ்பேகம் திருடன்... திருடன்.. என அலறினார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் இதுபற்றி தனது மகனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

உடனே வீட்டுக்கு விரைந்து வந்த முகமதுரியாஸ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை தேடினார். மும்தாஜ்பேகம் கூறியபடி பணம் திருடிசென்ற வாலிபரின் அங்க அடையாளங்களை வைத்து தேடிய போது அருகில் பள்ளி வாசல் தெருவில் நின்று கொண்டு இருந்த ஒரு வாலிபர் பொதுமக்களை பார்த்ததும் தப்பி ஓடமுயன்றார். இதையடுத்து பொதுமக்கள் அந்தவாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தான் முகமதுரியாஸ் வீட்டில் பணம் திருடியவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் லிபியா நாட்டை சேர்ந்த அப்துல் ஓமரன் (27) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அப்துல்ஓமரனை கைது செய்து இதுபோன்று வேறு ஏங்கேனும் கைவரிசை காட்டி உள்ளானா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News