செய்திகள்
குழந்தைகள் வராததால் பள்ளி மற்றும் வகுப்பறை வெறிச்சோடி கிடக்கும் காட்சி

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்த கிராம மக்கள்

Published On 2020-01-06 06:34 GMT   |   Update On 2020-01-06 06:34 GMT
காரிமங்கலம் அருகே ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் புறக்கணித்தனர்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பூமாண்ட அள்ளி 4-வது வார்டில் பதிவான ஓட்டுக்களை செல்லாதவை என்று அறிவித்த அதிகாரிகளை கண்டித்து பூமாண்ட அள்ளி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இன்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பேராட்டம் நடத்தினர். இதனால் மேக்கனாம்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிக்கு குழந்தைகள் வராததால் பள்ளி வகுப்பறை வெறிச்சோடி காணப்பட்டது அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டாலும் குழந்தைகள் வராததால் வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. 
Tags:    

Similar News