செய்திகள்
சென்னை விமான நிலையம்

வடமாநிலங்களில் பனிப்பொழிவு- சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து

Published On 2019-12-31 06:22 GMT   |   Update On 2019-12-31 06:22 GMT
சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய 5 விமானங்கள் பனிப்பொழிவு காரணமாக ரத்து செய்யப்பட்டன. இதேபோல பெங்களூரில் இருந்து கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு செல்லக்கூடிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
சென்னை:

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

காலையில் நிலவி வரும் இந்த பனிப்பொழிவால் விமான நிலையங்களில் விமானத்தை தரை இறக்குவதிலும் புறப்படுவதிலும் விமானிகளுக்கு சிரமம் இருந்தது வருகிறது. இதன் காரணமாக சென்னை- டெல்லி இடையே 28 விமானங்கள் நேற்று தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய 14 விமானங்களும், டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய 14 விமானங்களும் பனிப்பொழிவு காரணமாக தாமதமாக இயக்கப்பட்டன.

பிற நகரங்களுக்கு சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய 5 விமானங்கள் இதன் காரணமாக ரத்து செய்யப்பட்டன. இதேபோல பெங்களூரில் இருந்து கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு செல்லக்கூடிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

டெல்லி, குவாலியர், வாரணாசி, ஜெய்ப்பூர் விமான நிலையங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்த காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். நீண்ட நேரம் சென்னை, டெல்லி, பெங்களூர் விமான நிலையங்களில் காத்து இருந்தனர்.

விமானங்களை பாதுகாப்பாக இயக்கவும், பயணிகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும் விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. விமானங்களை தரை இறக்கக்கூடிய சாதகமான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் இறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதால் வடமாநில நகரங்களுக்கு இடையே பனிப்பொழிவு குறைந்த பிறகு இயக்கப்பட்டது.

விமானங்கள் தாமதமாக புறப்படுதல், ரத்து செய்தல் போன்ற தகவல்களை பயணிகள் இணைய தளம் உள்ளிட்ட ஊடகங்கள் வழியாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News