செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

திண்டுக்கல் அருகே மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை

Published On 2019-12-12 10:49 GMT   |   Update On 2019-12-12 10:49 GMT
திண்டுக்கல் அருகே கணவர் விவாகரத்து கேட்டதால் மனமுடைந்து மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சின்னாளபட்டி:

திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி பஸ்நிலையம் பகுதியை சேர்ந்தவர் பொற்கொடி (வயது 49). மாற்றுத்திறனாளி. டெய்லரான இவருக்கும் சிவக்குமார் (41) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சிவக்குமார் பிரிந்து சென்றார். பொற்கொடி தனது தாய் மகாலட்சுமியுடன் வசித்து வந்தார். சிவக்குமார் விவாகரத்து கேட்டு அடிக்கடி தகராறு செய்ததால் பொற்கொடி மன உளைச்சலில் இருந்தார்.

இன்று காலை அவரது தாய் வெளியூர் சென்று விட்டார். சகோதரர் வீட்டுக்கு வந்த போது வீடு உள் பக்கமாக பூட்டி இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். அங்கு பொற்கொடி தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சின்னாளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் போலீசார் வர நீண்ட நேரம் ஆனது. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் காவலர் மட்டுமே உள்ளார். அதனால் தாமதம் ஆகிறது. போலீசார் வந்தஉடன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொள்வோம் என தெரிவித்தனர். கணவர் விவாகரத்து கேட்டதால் மனமுடைந்து மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News