செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து சட்டநகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

Published On 2019-12-11 15:57 GMT   |   Update On 2019-12-11 15:57 GMT
பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, அதன் சட்டநகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, அதன் சட்டநகல் எரிப்பு போராட்டம் நேற்று காமராஜ் வளைவு சிக்னல் பகுதியில் நடந்தது. இந்த போராட்டத்திற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வடக்குமாதவி சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காமராஜர் வளைவு சிக்னல் பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் ஊர்வலமாக வந்தவர்களை வழிமறித்தனர். அப்போது மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நகலை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் எரித்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் முகமதுரபீக், மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்கனி, மாவட்ட செயலாளர்கள் ‌ஷாஜகான், பிலால், துணைத்தலைவர் பாரூக் உள்பட 22 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News