செய்திகள்
புல்லாவெளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

தொடர் மழை - புல்லாவெளி நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2019-12-05 08:20 GMT   |   Update On 2019-12-05 08:20 GMT
தொடர் மழை காரணமாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பெரும்பாறை:

மேற்கு தொடர்ச்சி மலையில் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை அருகே இயற்கை எழில் மிகுந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பெரும்பாறை, மஞ்சள்பிரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பமாள்பட்டி, கல்லக்கிணறு, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, பாச்சலூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மலைக்கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக பல இடங்களில் ஊற்று தண்ணீர் சிறு அருவியாக விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் குடகனாற்றில் தண்ணீர் அதிகளவு பெருக்கெடுத்து புல்லாவெளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த தண்ணீர் திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் காமராஜர் அணை மற்றும் அதனை சுற்றி உள்ள கண்மாய்களுக்கும் செல்கிறது.


Tags:    

Similar News