செய்திகள்
சென்ட்ரல் ரெயில் நிலையம்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த சிறுவன் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சிக்கினான்

Published On 2019-11-23 10:01 GMT   |   Update On 2019-11-23 10:01 GMT
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கஞ்சா கடத்தி வந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு இன்று எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

8-வது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கி சென்றனர். அப்போது அந்த பிளாட்பாரத்தில் நின்ற ரெயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரித்தனர்.

சிறுவன் ஒருவன் பெரிய பார்சலுடன் வந்தான். அவன் கொண்டு வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 5 பாக்கெட் கஞ்சா பொட்டலம் இருந்தது. அவற்றின் மொத்த எடை 10 கிலோ ஆகும்.

அதனை பறிமுதல் செய்த போலீசார் சிறுவனிடம் தொடர்ந்து விசாரித்த போது அவனது சொந்த ஊர் தேனி மாவட்டம் வடக்குபட்டியை சேர்ந்தவர் எனவும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வருவதையும் ஒப்புக்கொண்டான்.

சிறுவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருவேற்காடு பகுதியில் கஞ்சா விற்றதாக ஸ்ரீகாந்த், சஞ்சித், கிங்ஸ்டன், சுரேஷ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவும், ரூ. 30 ஆயிரம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
Tags:    

Similar News