செய்திகள்
சமத்துவமக்கள் கட்சி

உள்ளாட்சி தேர்தல் குறித்து சமத்துவமக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

Published On 2019-11-05 16:32 GMT   |   Update On 2019-11-05 16:32 GMT
குமரியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து சமத்துவமக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமையில் நடந்தது.
நாகர்கோவில்:

குமரி கிழக்கு மாவட்ட சமத்துவமக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் புளியடி பால்ராஜ் முன்னிலை வகித்தார்.

மாவட்ட பொருளாளர் குலசை ரவிகுமார், மாநகரச் செயலாளர் ஜெயக்குமார், மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் அமலன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெபசிங், முருகன் மற்றும் அகஸ்தீஸ் வரம் ஒன்றிய செயலாளர் ரமேஷ், விஜய், மாவட்ட பிரதிநிதி மைக்கேல்ராஜ், கலை இலக்கிய அணி செயலாளர் தர்மராஜன், வக்கீல் அணி செண்பகவல்லி, தொண்ட ரணி ராஜேஷ், வர்த்தகர் அணி ஜேம்ஸ், மாநகர மகளிரணி சந்திரா, விவசாய அணி எபனேசர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் குறித்து தலைவர் சரத்குமார் எடுக்கப்படும் முடிவிற்கு கட்டுப்பட்டு நடப்பது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளின் விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News