செய்திகள்
இந்திரா காந்தி படத்திற்கு காங்கிரஸ் கட்சிசார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட காட்சி

கரூர் - ஆலங்குடியில் இந்திராகாந்தி படத்திற்கு மாலை அணிவிப்பு

Published On 2019-11-01 14:32 GMT   |   Update On 2019-11-01 14:32 GMT
கரூர் மற்றும் ஆலங்குடியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35-வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சிசார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 35-வது நினைவுநாள் காங்கிரஸ் கட்சிசார்பில் ஆலங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கென்னடி தலைமையில் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி இந்திரா காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் தொண்டர்களும் ,பொதுமக்களும், உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சியில் அரங்குளவன், ரமேஷ், சுப்பையா, மாரிமுத்து, சோலை, அருள் பிச்சை, ராஜாங்கம்., மற்றும் பொறுப்பாளர்களும்,மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உப்பிடமங்கலத்தில் அமைந்துள்ள இந்திராகாந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழியினை ஏற்றனர். இதற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், நகர தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சேங்கல் மணி, குமார் மற்றும் பேரூராட்சி தலைவர் கமல் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல், கரூர் கோவை ரோட்டிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News