செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்

மதுரையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 1-ந்தேதி நடக்கிறது

Published On 2019-10-30 10:13 GMT   |   Update On 2019-10-30 10:13 GMT
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகமும் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.
மதுரை:

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வேலை நாடும் இளைஞர்கள் பயன்பெறுவதற்காக வெள்ளிக்கிழமை தோறும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகமும் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடும் இளைஞர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப ஆட்களை தேர்வு செய்கின்றன.

இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் 12-ந் தேதி காலை 10 மணிக்கு மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எந்த விதத்திலும் பாதிக்காது என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் மகா லட்சுமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News