செய்திகள்
சிமெண்ட் மூட்டைகள் கொண்டு செல்லப்படும் காட்சி.

பாப்பிரெட்டிப்பட்டியில் பழுதடைந்த அரசு குடியிருப்பு சிமெண்டு குடோனாக செயல்படும் அவலம்

Published On 2019-10-24 16:43 GMT   |   Update On 2019-10-24 16:43 GMT
பாப்பிரெட்டிப்பட்டியில் பழுதடைந்த அரசு குடியிருப்பு சிமெண்டுகளை அடுக்கி வைக்கும் இடமாக செயல்பட்டு வருகிறது. எனவே இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.




தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பழுதடைந்த அரசு குடியிருப்பு, அரசு சிமெண்டுகளை அடுக்கி வைக்கும் இடமாக செயல்பட்டு வருகிறது.




பாப்பிரெட்டிப்பட்டி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்புனர் அலுவலகம் பின்புறம் 10-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளனர். இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கும்மேல் ஆகும். 

இந்நிலையில் சில குடியிருப்புகள் பழுதடைந்து காணப்படுகிறது. மேற்கூரை கான்கிரேட் மற்றும் ரூப் கம்பிகள் வெளியில் தெரிந்த நிலையில் உள்ளது. இவை எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும். இந்த குடியிருப்புகளை ஊழியர்கள் பயன்படுத்த முடியாத நிலையில், அரசு சிமெண்டுகளை அடுக்கி வைக்கும் இடமாக செயல்பட்டு வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த குடியிருப்புகளை புதுப்பித்து ஊழியர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Tags:    

Similar News