செய்திகள்
சிறை

ஊத்தங்கரையில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் சிறையில் அடைப்பு

Published On 2019-10-22 13:30 GMT   |   Update On 2019-10-22 13:30 GMT
ஊத்தங்கரையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் ஊத்தங்கரை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த ஹெரிப் (வயது31), ஊத்தங்கரையை சேர்ந்த பழனி மகன் வெங்கடேசன் (26), கல்லாவியை அடுத்துள்ள என்.வெள்ளாளபட்டியை  சேர்ந்த சந்தோஷ் குமார் (26) ஆகியோர் என்பது  தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கைதான 3 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News