செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2019-10-19 07:19 GMT   |   Update On 2019-10-19 07:19 GMT
மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்து போன்ற சம்பவங்களில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெருஞ்சேரியை சேர்ந்த கணேஷ், மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த ரகுநாத், பாப்பிரெட்டிப்பட்டி, பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பழனி,

திருத்தணி முத்துக்கொண்டாபுரத்தைச் சேர்ந்த பானி, துறையூர் மாராடி கிராமத்தைச் சேர்ந்த குமார், கறம்பக்குடி மாங்கோட்டையைச்சேர்ந்த தமிழரசன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மேட்டுப்பாளையம் சின்னட்டியூரைச் சேர்ந்த வெங்கடாசலபதி, காரைக்குடியைச் சேர்ந்த காந்திமதி, கும்பகோணம் வட்டம், இஞ்சிக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மோகன், திண்டுக்கல் அணைப்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை, குடவாசலைச் சேர்ந்த ராஜமாணிக்கம் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

திருப்புவனம் திருப்பாச்சேத்தியைச்சேர்ந்த கவின் ராஜா பாம்பு கடித்து உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Tags:    

Similar News