செய்திகள்
படுகொலை

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - மனைவியிடம் விசாரணை

Published On 2019-10-15 05:21 GMT   |   Update On 2019-10-15 06:38 GMT
மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை எஸ்.எஸ்.காலனி சிட்டலாட்சி நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது44), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று இரவு நண்பர்கள் சிலருடன் வீட்டின் முன்பு உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு ஆட்டோவில் 4 பேர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

அப்போது அந்த கும்பல் ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டியதுடன் அவரது மர்ம உறுப்பை அறுத்து விட்டு ஆட்டோவில் தப்பி சென்று விட்டது.

இதனால் அலறி துடித்த அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை ரஞ்சித்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக ரஞ்சித் குமாரின் தாய் ஜெகதாம்பாள் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போலீசாரின் விசாரணையில் ரஞ்சித்குமாருக்கு மனைவி சுபா, 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுபா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சித்குமாரையும், குழந்தைகளையும் பிரிந்து சென்று விட்டார். எனவே ரஞ்சித் குமார் உறவுக்கார பெண் கோமதியுடன் சேர்ந்து குடித்தனம் நடத்தி வருகிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுபா, உன்னை சும்மா விடமாட்டேன் என்று செல்போனில் பேசி அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.

ஆனாலும் ரஞ்சித்குமார் கோமதியுடன் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுபா தூண்டுதலின்பேரில் ஆட்டோ டிரைவர் பிரகாஷ், பாப்ளி மற்றும் 2 பேர் ரஞ்சித்குமாரின் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் சுபாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரகாஷ், பாப்ளி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News