செய்திகள்
நிலவேம்பு கசாயம்

கரூர் மாவட்ட அமமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

Published On 2019-10-14 16:23 GMT   |   Update On 2019-10-14 16:23 GMT
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க கரூர் மாவட்ட அமமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
கரூர்:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கரூர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் கரூர் தெற்கு நகரம் தான்தோன்றிமலை பஸ் நிறுத்தம் அருகில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் பி.எஸ்.என். தங்கவேல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

இதில் மாவட்ட அவை தலைவர் ஆரியூர் சுப்பிரமணியன், துணை செயலாளர் பெரி யண்ணன், காதப்பாறை தங்கவேல், ஒன்றியசெய லாளர்கள் மாதவன், கண்ணன், சண்முகம், மாண வரணி மாவட்ட செயலாளர் சிவகுமார், தான்தோன்றி மலை மாரிமுத்து, மெடிக்கல் தங்கவேல், லதா ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தாமோதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News