search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nilavembu kashayam"

    தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது.
    ஆத்தூர்:

    தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. ஒன்றிய கழகம் சார்பில் கெங்கவல்லி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சின்னதுரை தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் சாத்தப்பாடி மணி (எ) பழனிசாமி ஆகியோர் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் கெங்கவல்லி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், தலைவாசல் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் அரங்கசாமி, லட்சுமணன், தலைவாசல் முன்னாள் ஒன்றிய நிர்வாகிகள் தேவேந்திரன், பிச்சமுத்து, தலைவாசல் வெங்கடேசன், சித்தேரி கண்ணுசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாஸ்கர், பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுவையை அடுத்த ஆரோவில் அருகே இன்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றோருக்கு மணமக்கள் நிலவேம்பு சகாயத்தை வழங்கினர். #NilavembuKashayam
    சேதராப்பட்டு:

    டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுக்கும் வகையில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு டீ, காப்பிக்கு பதிலாக நிலவேம்பு கசாயத்தை மணமக்கள் வழங்கினர்.

    புதுவையை அடுத்த ஆரோவில் அருகே சஞ்சீவி நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இசை கலைஞர். இவருக்கும், சென்னையை சேர்ந்த பட்டதாரி பெண்ணான கீர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று காலை திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    தாலி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் மணமக்கள் மண்டப வாயிலில் நின்று விழாவில் பங்கேற்றவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.

    அதனை அனைவரும் மறுக்காமல் வாங்கி பருகியதோடு மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். #NilavembuKashayam
    பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலை தொடர்ந்து மஞ்சூர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.
    மஞ்சூர்:

    பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் பொதுமக்களுக்கு நிலவேம்பு காசாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா அறிவுறுத்தியுள்ளார்.

    இதன்படி மஞ்சூர் காவல் சரகத்திற்குட்பட்ட மஞ்சூர் பஜார், எமரால்டு பகுதிகளில் இன்ஸ்பெக்டர் தெஹலத்நிஷா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, சுதாகர் மற்றும் போலீசார் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கியதுடன், சுற்றுபுறங்களில் தண்ணீர் தேங்கி நிற்ககூடிய தேவையற்ற பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். #tamilnews
    டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குங்கள் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #mkstalin #dengue #swineflu #nilavembukashayam

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “மக்கள் பணியே மகேசன் பணி” என அண்ணா வகுத்தளித்த நெறியில் கலைஞர் நடந்த வழியில், தி.மு.க. தொடர்ந்து தொய் வின்றிச்செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டையே அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல்மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

    பருவநிலை மாற்றத்தையும் நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளையும் கவனத்தில் கொள்ளாமல் கொள்ளையடிப்பதற்கே நேரம் போதாமல் இருக்கும் ஆட்சியாளர்கள் காட்டிய அலட்சியத்தின் விளைவாக உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மக்கள் நலனின் இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால் தமிழ் நாட்டை உடனடியாக ‘மெடிக்கல் எமர்ஜென்சி’ மாநிலமாக அறிவித்து உரிய மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியும் அ.தி.மு.க. ஆட்சியினர் கவனம் செலுத்தவில்லை.

    ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் தி.மு.க. தன்னால் இயன்ற அளவில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை அண்ணா அறிவாலயத் தில் நிலவேம்புக் கசாயம் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தேன். டெங்குகாய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயம் ஒரு தடுப்புமருந்தாக இருக்கும் என்ற அடிப்படையில், தி.மு.க. ஆட்சி நடைபெற்றகாலத்திலேயே சென்னை மாநகராட்சியில் இது வழங்கப்பட்டது.


    தொடர்ந்து பலமுறையும் கழகத்தின் சார்பில் நில வேம்புக் கசாயம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நிலவேம்புக் கசாயம்வழங்கும் பணி பருவமழைக்காலம் முடியும் வரையிலும், காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தி மட்டுப்படும் வரையிலும் தொடர்ந்திட வசதி செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க.வின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுவது போலேவ, கழகத்தின் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர்கிளைக் கழக அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நில வேம்புக்கசாயம் தொடர்ந்து வழங்கி, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு, மக்கள் நலன் காக்கும் பணியில்கழகத்தினர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mkstalin #dengue #swineflu #nilavembukashayam

    சென்ட்ரல்-எழும்பூர் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. பயணிகள் ஆர்வமாக வாங்கி குடித்தனர். #Nilavembukashayam
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்க மாநகராட்சி, சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபம், ஓட்டல், கட்டுமான பணி இடங்கள், அரசு மற்றும் தனியார் காலி இடங்களில் மழை நீர் தேங்காதபடி அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ், ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு இடங்களில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட நில வேம்பு கசாயம் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இது தவிர சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி 5-வது மண்டலம் சார்பில் மண்டல நல அலுவலர் டாக்டர் கவுசல்யா, முதுநிலை பூச்சியல் வல்லுனர் யமுனா ஆகியோர் முன்னிலையில் பயணிகள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ரெயில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. பயணிகள் ஆர்வமாக வாங்கி குடித்தனர். சிறுவர்களுக்கும், பெற்றோர்கள் வழங்கினர். நிலவேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கலாம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். நூற்றுக்கணக்கான பயணிகள் நிலவேம்பு கசாயத்தை பருகி சென்றனர்.

    மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரசாரம் செய்தனர்.

    கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீஸ் குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. #Nilavembukashayam

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நிலவேம்பு கசாயம் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. #NilavembuKashayam #Dengue
    சென்னை:

    தமிழகத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல்கள் தமிழகம் முழுவதும் பரவும் அபாயம் இருக்கிறது.

    சென்னை கொளத்தூரை சேர்ந்த தீக்ஷா, தக்‌ஷன் ஆகிய இரட்டை குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியானது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பன்றிக்காய்ச்சலுக்கும் சிலர் பலியாகி இருப்பது பொதுமக்களிடையே பயத்தை அதிகரித்துள்ளது.

    எனவே டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலாலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த மாதத்தில் மட்டும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


    பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் 10 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர். கடலூர், திருச்சியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனைகளில் இதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். சுகாதாரத்துறை எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையால் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2400 ஆக குறைந்துள்ளது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 82 நடமாடும் மருத்துவ குழுக்கள், கொசு ஒழிப்பு விரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் சுகாதாரத்துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 10 தற்காலிக பணியாளர்களும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 20 தற்காலிக பணியாளர்களும், பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு பேரூராட்சிக்கு 10 தற்காலிக பணியாளர்களும், நகராட்சி, மாநகராட்சி சார்பில் 250 முதல் 300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 20 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    எலிசா முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் ரத்தப் பரிசோதனை மையங்கள் 31-ல் இருந்து 125ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனை கருவி, ரத்தக் கூறுகள், ரத்தம், சுய தற்காப்பு சாதனங்கள் ஆகியவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நிலவேம்பு கசாயம் வினியோகிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் நிலவேம்பு குடிநீர் காய்ச்சி தயாராக வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்களுக்கு பொட்டலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் 407 அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்காக மண்டலத்துக்கு தலா 10 கிலோ நிலவேம்பு பொடி கொடுக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப மண்டலங்களுக்கு நிலவேம்பு பொடி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு குடிநீரை குடிக்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ‘டேமிபுளூ’ தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. #NilavembuKashayam #Dengue
    டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கு நூலஅள்ளி அரசு சுகாதார நிலையத்தில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    தருமபுரி:

    டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கு நூலஅள்ளி அரசு சுகாதார நிலையத்தில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கினார்.

    நூலஅள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கர்ப்பிணி கால பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி விளக்கி பேசினார். வீடுகளில் பெண்கள் வீட்டை சுத்தமாக வைத்து பராமரிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க வீட்டை சுற்றி கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் டம்ளர், மூட்டை ஓடு, டயர், உடைந்த மண்பானை சட்டி ஆகிய பொருட்களில் தேங்கும் மழைநீரால் டெங்கு கொசு உருவாகிறது. 

    அந்த தேங்கி இருந்த மழைநீரில் இருந்து உருவான ஒரு கொசுவை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. டெங்கு கொசு பரவாமல் இருக்க வீடுகளை அனைவரும் சுத்தமாக பராமரித்து வைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தீவிரமாக கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனின் உத்தரவின் பேரில் வேலாயுதம் பாளையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநர் ஆலோசனையின் படி வேலாயுதம் பாளையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சக்தியேந்திரன் கலந்துக் கொண்டு மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கு பெற்று பயன் பெறுவது குறித்து திட்ட விளக்க உரையாற்றினர். அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கூறப்பட்டது. 

    நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சத்தியேந்திரன் தலைமையில் செவிலியர்கள் ஜெயந்தி, பாப்பாத்தி, உதவியாளர்கள் ராஜமாணிக்கம், குமார் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். மேலும் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, காய்ச்சல், சளி,வயிற்றுப் போக்கு,தோல் வியாதிகள், ரத்த சோகை, வயிற்று வலி, குடற்புழு நீக்க மாத்திரை கள் வழங்கப்பட்டது. இதில் வேலாயுதம்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளைசேர்ந்த சுமார் 300-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்குநில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
    ×