செய்திகள்
வைகை அணை

61 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்

Published On 2019-10-14 09:50 GMT   |   Update On 2019-10-14 09:50 GMT
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் 61 அடியை நெருங்கி உள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.47 அடியை எட்டி உள்ளது. அணைக்கு 66 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் குடிநீருக்காகவும் மற்றவை உபரி நீராக திறக்கப்படுகிறது. இதனால் வராக நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே விவசாயிகள் எச்சரிக்கையுடன் ஆற்றை கடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொடைக்கானலில் பெய்து வரும் கன மழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 67 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 43.40 அடியாக உள்ளது. நீர் திறப்பு இல்லை.

வைகை அணையின் நீர்மட்டம் 60.27 அடியாக உள்ளது. நேற்று முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து 544 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.15 அடியாக உள்ளது. 735 கன அடி நீர் வருகிற நிலையில் 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 8.4, தேக்கடி 9.4, வைகை அணை 6, மஞ்சளாறு 5, சோத்துப்பாறை 15 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News