செய்திகள்
விஜய் கோகலே

தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது - வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே

Published On 2019-10-11 18:57 GMT   |   Update On 2019-10-11 18:57 GMT
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
சென்னை:

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் நாள் சந்திப்பு நிறைவடைந்தநிலையில், இரவு உணவுக்கு பின், இருவரும் ஓட்டலுக்கு திரும்பி உள்ளனர். நாளை மீண்டும் இருவரும் சந்திக்க உள்ளனர்.

இந்நிலையில்,  வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே செய்தியாளர்கள் சந்திப்பில், “சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை தமிழக அரசின் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக சீன அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டினார். பிரதமர் மோடி-  சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பில் வர்த்தகம் , பொருளாதாரம், முதலீகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இருநாடுகளிடையே நிலவும் பிரச்னைகள் தொடர்பாகவும், அதனை சரி செய்வது தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது. மேலும் இந்தியா-சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள் மற்றும் சீனா-மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது” என்று அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News