செய்திகள்
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவி

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய சேலம் பள்ளி மாணவிக்கு விருது

Published On 2019-10-01 17:49 GMT   |   Update On 2019-10-01 17:49 GMT
மரம் நடுதல், இயற்கை பாதுகாப்பு போன்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய சேலம் பள்ளி மாணவிக்கு விருது வழங்கப்பட்டது.
சேலம்:

சேலம் குரு கான்சிராம் மெமோரியல் சாரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் மரம் நடுதல், இயற்கை பாதுகாப்பு, போதை ஒழிப்பு, ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்காகவும் சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி 11-ம் வகுப்பு மாணவி அறிவுச்சுடருக்கு பாராட்டு விழா மல்லூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு குரு கான்சிராம் சாரிட்டபுள் டிரஸ்ட் நிறுவன தலைவர் டாக்டர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். வாசு என்கிற பாலமுருகன் வரவேற்றார்.இதில், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சாமிதுரை, சேலம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு உமாசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவி அறிவுச்சுடரை பாராட்டி அவருக்கு ஞானச்சுடர் என்ற விருதை வழங்கினர். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய ரெயில்வே எஸ்.சி, எஸ்.டி. தொழிற்சங்க சேலம் கோட்ட மூத்த தலைவர் ஆசிர்வாதம், அருந்ததியர் மக்கள் இயக்கம் மாநிலத்தலைவர் வக்கீல் பிரதாபன், தொழில்அதிபர் பாஸ்கரன், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஜங்சன் ஆ.அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் அம்பேத்கர், ஆட்டோ சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி சேலைகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகமும் வழங்கப்பட்டது. முடிவில் டிரஸ்ட் இயக்குனர் நடராஜ் நன்றி கூறினார்
Tags:    

Similar News