செய்திகள்
கேஎஸ் அழகிரி

சொல்வதெல்லாம் நடக்க அமைச்சர் செல்லூர் ராஜூ என்ன கடவுளா? - கே.எஸ்.அழகிரி கேள்வி

Published On 2019-09-23 03:04 GMT   |   Update On 2019-09-23 03:04 GMT
சொல்வது எல்லாம் நடக்க அமைச்சர் செல்லூர் ராஜூ என்ன கடவுளா என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது முடிவு செய்யப்படும். சரியான திட்டமிடல் இல்லாததே இந்திய பொருளாதாரம் சரிவதற்கு காரணம். பண மதிப்பிழப்பு மற்றும் முறையற்ற ஜி.எஸ்.டி.யால் தொழில்களை முடக்கிவிட்டனர். இவற்றை சரி செய்ய முறையான திட்டமிடல் மத்திய அரசிடமும், மோடியிடமும் இல்லை. இதற்கு ஏற்ற நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கிடையாது.

ப.சிதம்பரத்தை தொடர்ந்து அதுபோன்ற நிலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் ஏற்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகிறார். அவர் சொல்வது எல்லாம் நடக்க செல்லூர் ராஜூ என்ன கடவுளா? அமைச்சர்கள் வீணாக பிதற்றுகின்றனர்.

அமித்ஷா பின்வாங்கியதால்தான் தி.மு.க. போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றது. யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இடைத்தேர்தலில் பா.ஜனதா கொள்கை, அ.தி.மு.க.வின் கொள்கையற்ற தன்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லி தி.மு.க.-காங்கிரஸ் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News