செய்திகள்
நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

மதுரை சிம்மக்கல்லில் நிதி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

Published On 2019-09-15 11:47 GMT   |   Update On 2019-09-15 11:47 GMT
மதுரை சிம்மக்கல்லில் நிதி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை சிம்மக்கல் மெயின் ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் 3 மாடி கட்டிடம் உள்ளது. முதல் மாடியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. 2-வது மாடியில் யுனிவர்சல் சிட்பண்ட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இன்று விடுமுறை நாள் என்றாலும் ஒருசில ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். 12 மணி அளவில் நிதி நிறுவனத்தில் இருந்து குபுகுபுவென கரும் புகை வெளியானது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.

பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். முதல் மாடி, 3-வது மாடிக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தீ விபத்தில் நிதி நிறுவனத்தில் இருந்த தஸ்தாவேஜுகள் எரிந்து நாசமானது. நிதி நிறுவனத்தில் பணம் எவ்வளவு இருந்தது என்பது தெரியவில்லை. திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News