செய்திகள்
காய்கறிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு

Published On 2019-09-15 10:52 GMT   |   Update On 2019-09-15 10:52 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தை விட தற்போது காய்கறி விலை குறைந்து உள்ளது.

போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தை விட தற்போது காய்கறி விலை குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.60-க்கு விற்ற பீன்ஸ் தற்போது ரூ.40-க்கும், ரூ.40-க்கு விற்ற கேரட் ரூ.20-க்கும் ரூ.10-க்கு விற்ற நாட்டு தக்காளி தற்போது ரூ.13-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க் கெட்டில் இன்றைய காய்கறி மொத்த விலை விபரம் வருமாறு:-

நாட்டு தக்காளி - ரூ.13

பெங்களூர் தக்காளி - ரூ.17

நாசிக் வெங்காயம் - ரூ. 36

அவரைக்காய் - ரூ.20

முட்டை கோஸ் - ரூ.10

பச்சை மிளகாய் - ரூ.15

காய்கறிகள் விலை குறைந்துள்ளது குறித்து மொத்த வியாபாரி சுகுமார் கூறியதாவது:-

கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு பச்சை காய்கறிகள் வழக்கமாக 350 லாரிகள் வரை வந்து கொண்டிருந்தது. கடந்த 2 நாட்களாக 400 லாரிகள் வரை காய்கறிகள் வருகிறது.

இதன் காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 75 லாரிகள் வரை வந்து கொண்டிருந்த தக்காளி தற்போது 60 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதனால் தக்காளி விலை சற்று உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News