செய்திகள்
நீட் தேர்வு

அடுத்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கால அட்டவணை வெளியீடு

Published On 2019-08-24 05:23 GMT   |   Update On 2019-08-24 05:23 GMT
2020-ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு வருகிற டிசம்பர் 2-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். மே 3-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும்.
சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான (2019-20) மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கி விட்டன. இந்த நிலையில், அடுத்த கல்வி ஆண்டுக்கான (2020-21) மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து உள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2020-ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு வருகிற டிசம்பர் 2-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். அடுத்த ஆண்டு (2020) மார்ச் 27-ந் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 3-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த கல்வி ஆண்டு (2018-19) வரை நீட் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தி வந்த நிலையில், நடப்பு ஆண்டு (2019-20) முதல் தேசிய தேர்வு முகமை தேர்வை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News