செய்திகள்
விநாயகர் சிலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

திருவள்ளூரில் விநாயகர் சிலைகள் ஆய்வு

Published On 2019-08-20 09:49 GMT   |   Update On 2019-08-20 09:49 GMT
திருவள்ளூர் ஆவடி சாலையில் காக்களூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர்:

விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 2-ந் தேதி நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மும்முரமாக நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ரசாயன பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றனவா என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருவள்ளூர் வட்டாட்சியர் ஸ்ரீனிவாசன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, துணை வட்டாட்சியர் வசந்தி, திருவள்ளூர் வருவாய் ஆய்வாளர் பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் சுபா ஆகியோர் கொண்ட குழு திருவள்ளூர் ஆவடி சாலையில் காக்களூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் விநாயகர் சிலை செய்யும் இடங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் மற்றும் ரசாயனப் பொருள்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகின்றனவா என ஆய்வு செய்தனர்.

ஊத்துக்கோட்டையில் உள்ள விநாயர் சிலைகள் விற்க்கும் கடைகளில் பிளாஸ்டர் ஆப் பேரிஸ் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று தாசில்தார் செல்வகுமார், துணை தாசில்தார் பாரதி, வருவாய் ஆய்வாளர் யுகந்தர், இன்ஸ்பெக்டர் அனுமந்தன் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சிலைகளை சோதனை செய்து பார்த்தபோது அவை களிமண் மற்றும் சுண்ணாம்பு கொண்டு தயார் செய்தது தெரிந்தது. பிளாஸ்டர் ஆப் பேரிஸ் சிலைகளை தயார் செய்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News