செய்திகள்
கைது

உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் நர்சை தாக்கிய வாலிபர் கைது

Published On 2019-08-19 11:41 GMT   |   Update On 2019-08-19 11:41 GMT
உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டுக்குள் அனுமதிக்காத நர்சை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடுமலை:

உடுமலை யு.எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. பிரசவத்திற்காக உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்ந்து இருந்தார். குழந்தை பிறந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தன்று வேளாங்கண்ணியை பார்க்க அவரது சகோதரர் வினோத்குமார் வந்தார். நர்சு ஆரிபா பானு பணியல் இருந்தார். பார்வையாளர்கள் நேரம் முடிந்து விட்டது. அதுமட்டுமின்றி ஆண்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறி வினோத்குமாரை உள்ளே அனுப்ப மறுத்து விட்டார்.

இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார் நர்சு ஆரிபா பானுவிடம் தகராறு செய்தார். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது நர்சு மற்றும் அங்கிருந்தவர்களை வினோத்குமார் தகாதவார்த்தைகளில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மற்ற நர்சுகளுக்கு தெரியவந்ததும் 40 நர்சுகள் நேற்று தலைமை மருத்துவ அதிகாரியுடம் புகார் செய்தனர்.

இதற்கிடையில் பணி நேரம் முடிந்த பிறகு நர்சு மற்றும் பணியார்கள் 40 பேர் ஆஸ்பத்திரியில் அமர்த்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தகவல் கிடைத்ததும் உடுமலை டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில் நர்சிடம் தகராறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன் உடுமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது இசாக் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை (வயது 24) கைது செய்தார். இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News